Thursday, August 12, 2010

Inception பதில்கள்

என்னடா சின்னப் பையனாச்சேன்னு யாரும் கேள்வி கேட்காம விட்டுருவாங்களோன்னு நினைச்சேன். இருந்தாலும், என்னையும் மதிச்சு சில கேள்விகள் கேட்ட அந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி. இப்போ பதில்களுக்கு போவோம்.

திரு பத்மநாபனின் கேள்வி
  • please explain the story na?
முதல்லையே போட்டாரு பாருங்க ஒரு போடு. கண்டிப்பா சொல்றேன். அதுக்கு முன்னாடிச் சின்ன கேள்விகளுக்கு பதில் சொல்லிட்டு வந்துடறேன்.

திரு ரமியின் கேள்விகள்

  • Is the movie is begin in dream or real?
 அது டைரக்டர் நம்ம கற்பனைக்கே விட்டுடறாரு. open ending.
  • Actually what is the climax in this movie?
பாசிடிவா சொல்லனும்னா, அவங்க வெற்றிகரமா வேலைய முடிச்சிட்டு, நாயகன் காப் தன்னோட குழந்தைங்களோட இணையராருனு வெச்சிக்கலாம். இல்லை, நெகடிவா போனா, காப் வேலையை சரியா முடிக்காம, லிம்போல மாட்டிகிட்டாருனு வெச்சிக்கலாம். இல்ல, ஒரு தரப்பினர் சொல்றா மாதிரி, படம் முழுக்கவே, காபோட கனவா இருக்கலாம். இதுக்கு பதில் இல்லைனு சொல்றதுதான் உண்மையான பதிலா இருக்கும். 
  • Different between extraction and inception?
ரொம்ப சிம்பிள். Extraction - சப் கான்ஷியஸ்ல / மண்டைல இருக்கற ஒரு விஷயத்தை திருடறது. Inception - அப்படியே உல்டா. அவங்க சப் கான்ஷியஸ்ல, அவங்களுக்கே தோணுவது மாதிரி ஒரு எண்ணத்த விதைப்பது. இதுல, Inception தான் ரொம்பக் கடினமான வேலை, ஏன்னா, விதைக்கற எண்ணம் அந்நியமா இல்லாம, அவங்களே யோசிச்சா மாதிரி இருக்கணும். 
  • Is there any explanation in movie that these are all possible or not?
இது ஒரு சைன்ஸ் ஃபிக்ஷன். இதெல்லாம் சாத்தியமா இல்லையான்னு இந்தப் படத்துல எங்கயும் ஆதாரத்தோட காமிக்கல.

திரு ஜெய்யின் கேள்விகள்
  • அந்த நாலாவது லெவல் லிம்போவா இல்லையா?

    அது லிம்போதான்..
  • அதிக மயக்கமருந்து எடுத்துகிட்டபின் கனவுல செத்தாதான் லிம்போ-க்கு போகமுடியும், அங்க செத்தா ரியாலிடிக்கு வரமுடியும்னு சொல்லறாங்க இல்லையா? ஆனா ஹீரோவும் அரியாட்னியும் நாலாவது லெவலுக்கு சாகாமலே போறாங்க... அரியாட்னியும் ஃபிஷரும் ஜாலியா கிக் மூலமாவே திரும்ப வர்றாங்க... அதுனால அது லிம்போவா இருக்க முடியாது இல்லையா? 
                  அது லிம்போதான்னு நான் சொல்றதுக்கான காரணங்கள். லிம்போ யாரோட கனவும் கிடையாது. அது ஒரு பொரம்போக்கு நிலம் மாதிரி. அங்க ஏற்கனவே போயிட்டு வந்தவங்களால சுலபமா அங்க போக முடியும். தெரிஞ்ச இடத்துக்கு நாம ஈசியா மத்தவங்கள கூட்டிட்டு போறதில்லியா, அது மாதிரி. ஹீரோவும் அரியாட்னேயும், ஹீரோவோட கனவுல இருக்கற லிம்போவுக்கு போறாங்க. ஏன்னா, ஹீரோவுக்கு தெரியும், தன்னோட மனைவி, அங்க தான் ஃபிஷர ஒழிச்சு வெச்சிருப்பாங்கன்னு. ஏன்னா, அவங்களோட முதல் + கடைசி விருப்பம் காபோட எப்பவும் ஒண்ணா இருக்கனும்ங்கறது மட்டுமே. அரியாட்னேயும் ஃபிஷரும் ஜாலியா கிக் மூலமாவே திரும்பி வரதுதான் நீங்க கேட்ட கேள்விக்கு பதிலே. லிம்போ கொஞ்சம் கொஞ்சமா அழிஞ்சிகிட்டு வராத பாக்கற அர்யாட்னே, மேல உள்ள லெவல்ல கிக் ஆரம்பமானதா உணர்ந்து, ஃபிஷர கீழ தள்ளி விட்டுட்டு, தானும் குதிக்கறாங்க.
  • ஆனா, அது லிம்போ இல்லைன்னா செத்துப்போன ஃபிஷர் எப்படி அங்க இருக்காரு? ஃபிஷர் திரும்ப மூணவது லெவலுக்கு வந்தபின் ஏன் குண்டடி பட்ட வலி இல்லை?
அது லிம்போதான். காபோட சப் கான்ஷியாசின் பிரதிபலிப்பான அவரோட மனைவி மால், காப் தன்னைத் தேடி வந்து, தன கூடவே இருக்கணும்னு, அவரை அங்கே ஒழிச்சு வெச்சிருக்காங்க. ஃபிஷரின் வலியின்மைக்கான காரணங்கள், என்னோட யூகத்தின் அடிப்படைல சொல்லனும்னா,  ஃபிஷர் லிம்போவுக்கு போயிட்டு திரும்ப வந்ததுனால இருக்கலாம். ஏன்னா, வீரியம் கம்மியான அடுத்த லெவலுக்கு போயிட்டு, திரும்ப வராரு இல்லையா. அதனால அவர் வலியை உணராம இருக்கலாம்.
  • ஒருவேளை நாலாவ்து லெவல், ஹீரோவோட சப்கான்ஷியஸ் லெவல்னு வச்சுகிட்டா, அங்க ஃபிஷரோட ப்ரொஜக்‌ஷன் (மால் மாதிரி) இருக்கலாம்... ஆனா ஃபிஷரே எப்படி இருக்க முடியும்? அந்த லெவலுக்கு ஹீரோவும் அரியாட்னியும் போரதுக்கு முன்னாடி கொஞ்ச நேரம் செத்துப்பொன ஃபிஷர் எங்க இருந்தாரு? 
செத்துப்போனவுடனே  ஃபிஷர் லிம்போவுக்கு போயிட்டாரு. உடனே, மாலும் சுடப்படறாங்க. முன்னாடியே சொன்னா மாதிரி, லிம்போவுக்கு போயிட்டு வந்தவங்களால, மறுபடியும் அதுக்குள்ள சுலபமா போக முடியும். போன பதில்ல சொன்னா மாதிரி, காபுக்காக ஃபிஷர பணயக்கைதி மாதிரி ஒழிச்சு வெக்கறாங்க மால். இதுல முக்கியமான விஷயம், இது எல்லாமே, காபையும் அறியாம, அவரோட குற்றஉணர்வின் பிரதிபலிப்பான மால் செய்யறாங்க. உண்மையான மால் எப்பவோ இறந்து போய்ட்டாங்க.
  • முக்கியமான விஷயம்... நாலாவது லெவல் முடியறப்போ, அரியாட்னி கீழே குதிக்கும் முன், ஹீரோகிட்ட “சைடோ லிம்போல இருக்காரு... போய் அவரைக்காப்பாத்து”-ன்னு சொல்லி துப்பாக்கி எடுத்து ஹீரோவை சுட பார்க்கிறாங்க... (அப்படின்னா நாலாவது லெவல் லிம்போ இல்லைதானே?)
இது சொல்ல வந்த காண்டக்ஸ்ட்ல நீங்க எடுத்துக்கலைன்னு நினைக்கறேன். அவங்க லிம்போலதான் இருக்காங்க. நீங்க படத்தை தமிழ்ல பாத்துருக்கலாம். ஆங்கிலத்துல வர டயலாக் இதுதான், "Don't lose yourself!! Find Saito and bring him back!"  . அவங்க துப்பாக்கி எடுத்து ஹீரோவா சுடப் பாக்கறது, அவரை மால் நினைவுலேர்ந்து காப்பாத்தி, நிஜ உலகத்துல கண் முழிக்க வெக்க.
  • ஹீரோவும் அவ்ர் மனைவியும் 50 வருஷம் வாழ்ந்ததா சொல்லற இடத்துல ஒரு ஷாட்ல அவங்களை பின்பக்கத்துல இருந்து காண்பிக்கறாங்க... அவங்க ரெண்டு பேரோட கையும் சுருங்கி வயசாகி இருக்காங்க... ஆனா, அதுக்கப்பறம் தற்கொலை பண்ணிக்கறப்போ இளமையா இருக்காங்களே? 50 வாழ்ந்தது பல லெவல் கனவுக்குள்ளா? இல்ல லிம்போலயா?
ஹீரோவும் அவர் மனைவியும் ஐம்பது வருஷம் நிஜமாவே லிம்போல கழிக்கறாங்க. ஆனா இந்தக் கதைய கேட்கற அரியாட்னேவோட காட்சியமைப்புலதான் நாம பாக்கறோம். அதனாலதான் ரெண்டு பேரும் இளமையாவே இருக்காங்க. இன்னொரு முறை காப் அதைப் பற்றி பேசும்போது, வயதான அவர்களோட காட்சிகள் வரும். ஏன்னா அதுதான் உண்மையான அவரோட காட்சியமைப்பு.

  • முடிவு ஓபன் எண்ட்தானே? ஒருவேளை மொத்த படமும் கனவுன்னு ஒரு argument இருந்தா எப்படி அதுக்கு முன்னாடி ரெண்டு வாட்டி எப்படி டோட்டம் விழுந்துச்சு?
கண்டிப்பா ஓபன் எண்டு தான். ரெண்டு வாட்டி டோட்டம் விழுந்ததற்கான காரணம் ரொம்ப சிம்பிள்னுதான் நான் நினைக்கறேன். அதோட சரியான வடிவமைப்பும், எடையும், எப்படி வேலை செய்யும்னும்  காபுக்கு நல்லாவே தெரியும். அது ஏன் அவர் கனவுல ஒழுங்க வேலை செய்யக்கூடாது. முக்கியமா, டோட்டம், நாம மத்தவங்க கனவுல இருக்கோமா இல்லையாங்கறத சொல்லுமே தவற, நம்மலோடதுல இல்லை.
  • க்ளைமாக்ஸ் கனவா/நிஜமா? படம் முழுக்க கனவா?, ஏன் குழந்தைகள் அதே இடத்துல இருக்காங்க(ஆனா க்ளைமாக்ஸ்ல வர்றது வேற செட் குழந்தகளாம்...!!), 
முன்னாடியே sollitten. ஓபன் எண்டு.
  • ஏன் டோட்டம் சுத்தறப்போ ஒரு தடவை சைட்டோவும், க்ளைமாக்ஸில் மைக்கேல் கெயினும் வந்து டிஸ்டர்ப் பண்ணறாங்க?, அப்படின்னா அவங்க ஹீரோவுக்கு பண்ணற இன்செப்ஷனா இது? அதுக்கு அரியாட்னி உதவியா? (அந்த பொண்ணுதான் முக்கியமான எதிர்பாராத பல விஷயங்கள் பண்ணுது படத்துல) இல்ல ஹீரோவே அவருக்கே இன்செப்ஷன் பண்ணிக்கறாரா? (to get rid of his guilt) ஏன்னா மெமெண்டோவும் ஒரு வகையில இதேதான்... மனைவி தற்கொலைக்கு ஹீரோ காரணமா இருந்து, அந்த குற்ற உணர்ச்சியை போக்க ஹீரோ பண்ணற கிறுக்குத்தனமான விஷயங்கள்தான் மொத்த படமே.
அப்படியும் ஷட்டர் ஐலாண்ட் மாதிரி யோசிக்கலாம். ஒப்பன் எண்டு தான்
  • ஹீரோ ஏன் கனவுல மட்டும் திருமண மோதிரம் போட்டு இருக்காரு, க்ளைமாக்ஸ்ல போடலையே? (அதை க்ளோஸ் அப்ல வேற காண்பிக்கறாங்க) அப்ப க்ளைமாக்ஸ் நிஜமா? மால் சொல்லற அதே “take a leap of faith” டயலாக் ஏன் சைடோ சொல்லறாரு? சம்பந்தமே இல்லாம நோலன் க்ளைமாக்ஸையே (speaking with saito in limbo) முதல் காட்சியா காண்பிப்பாருன்னு தோணலை... அதுக்கு ஏதாச்சும் காரணம் இருக்கா?
சில நேரங்கள்ல, டைரக்டர் சொல்ல வராத விஷயங்களைக் கூட நாமே புரிஞ்சிப்போம். அப்படியே தான் நீங்க கேட்கறதும் இருக்கு, அதனால, அதே மாதிரியே பதிலும் சொல்றேன்.  ஹீரோ, தன்னோட குற்ற உணர்ச்சிய போக்கிட்டதுநாளா கிளைமாக்ஸ்ல திரும்பவும் மோதிரத்தை போட்டிக்கிட்டு இருக்கலாம். நிஜத்துல அதுவரை அவர் போடாததுக்கு காரணம், தன்னோட மனைவியோட நியாபகங்களும், அது தர குற்ற உணர்வும் தான். கிளைமாக்ஸ்தான் படத்தோட முதல் காட்சி. அப்படி அது வேற காட்சியா இருந்தா, படம் முழுக்கவே ஒரு சைக்கிள் மாதிரி எடுத்துக்கலாம். ஷட்டர் ஐலாண்ட் தியரிய அடிப்படையா வெச்சு, ஹீரோ தன்னோட குற்ற உணர்வ போக்க, இதையே திரும்ப திரும்ப செய்யறாருன்னு வெச்சிக்கலாம்.

திரு சர்வேசன் கேட்ட கேள்வி
  • பனிமலை ஏன் குண்டு வச்சு தகர்க்கப்பட்டுது?
நீங்க முதல்ல வர பனிச்சரிவ  சொல்றீங்கன்னு நினைக்கறேன். அது, அவங்க முதல் லெவல்ல வர van நிலை தடுமாறி ஒரு ரோலிங் அடிச்சிட்டு நிக்கர்துனால ஏற்படுவது. அது நல்ல வேளையா கிக்கா மாறாம, எல்லாரும் அதை மிஸ் பண்ணிடறாங்க. அந்த  அதிர்வு, பனிச் சரிவோட போய்டுது.இரண்டாவதா தகர்க்கப்படுவது கிக்குக்காக. (தில்லாலங்கடி கிக்கு இல்லை)

இன்னும் கேள்விகள் இருந்தா பின்னூட்டத்துல போடுங்க, அதுக்கு பார்ட் 2 பதிவு போட்டுடலாம். திரு பத்மநாபன் கேட்டா மாதிரி, வேற ஒரு பதிவுல, முழுக்கதையும் சொல்றேன். ஒரு வேளை நான் சொன்னதும், என்னோட புரிதலும் தப்பா இருந்தா திருத்துங்க. கேள்வி கேட்ட அன்பர்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி.. :)



இப்படி கேட்ட கேள்விக்கெல்லாம், அடடே, ஆச்சர்யக்குறி ரேஞ்சுக்கு பதில் சொல்லிட்டனோ??


9 comments:

எஸ்.கே said...

சூப்பரா இருக்கு சார் நன்றாக விளக்கி இருக்கிறீர்கள்!
வாழ்த்துக்களும் நன்றிகளும்!

பாலா said...

//இப்படி கேட்ட கேள்விக்கெல்லாம், அடடே, ஆச்சர்யக்குறி ரேஞ்சுக்கு பதில் சொல்லிட்டனோ??//

இல்ல தல!

மேட்டரில் நான் பங்கெடுத்துக்கப் போறதில்லைங்கறனால....

சொல்லிட்டீங்க தல!! :) :)

பாலா said...

//ஆனா க்ளைமாக்ஸ்ல வர்றது வேற செட் குழந்தகளாம்...!!//

வேறு செட் உடைகள்.

பாலா said...

//Is the movie is begin in dream or real?
அது டைரக்டர் நம்ம கற்பனைக்கே விட்டுடறாரு. open ending//

லிம்போ.

பாலா said...

வேணாங்க. நான் இந்த விளையாட்டுக்கு வரலை.

ஜெய் said...

ஆஹா... இன்னைக்கு இங்க வேற நிறைய டிஸ்கசன் போகும் போலருக்கே... இன்னோர்ரு இடத்துல பிசியா இருக்கேன்... வந்துடறேங்க...

// வேணாங்க. நான் இந்த விளையாட்டுக்கு வரலை //
தல... ஏன்? ஏன்? ஏ......ன்?

SurveySan said...

///இரண்டாவதா தகர்க்கப்படுவது கிக்குக்காக.//

லிஃப்ட்ல மயக்கத்துல இருக்கரவங்களை எழுப்பினா போதுமே, பனிமலை வேட்டு வச்சு ஏன் சாகப் பாக்கணும்?

ஜெய் said...

தல... மொதல்ல இவ்வளவு தூரம் டிஸ்கஸ் பண்ண ஆள் கிடைச்சதே சந்தோஷம்... அதுனாலயே முதல்ல ஃபாலோவர் ஆயிட்டேன்... சர்வேசனும் வந்துட்டாரு... இன்னைக்கு இந்த படத்தை புரிஞ்சுக்காம கிளம்பப்போறதில்லை... பாலா காலையில வந்து ஜாயின் பண்ணிப்பாரு... (ஓகேதானே தல?)

நிறைய விஷயம் நான் நினைக்கிற மாதிரிதான் சொல்லி இருக்கீங்க... சிலது வேற மாதிரி நான் நினைச்சுகிட்டு இருக்கேன்.. அதை மட்டும் கமெண்ட் போடறேன்... உங்களுக்காவது நியூயார்க் டைம்ஸ் படிக்கிற தோழி இல்லாம இருக்கணும்னு வேண்டிகிட்டு, கமெண்டறேன்... அப்பறம்... கமெண்ட் டெம்ப்ளேட் கொஞ்சம் அகலமா வச்சீங்கன்னா புண்ணியமா போகுங்க... :)

// Is the movie is begin in dream or real?
அது டைரக்டர் நம்ம கற்பனைக்கே விட்டுடறாரு. open ending. //
அது லிம்போதாங்க... படம் முழுக்க ஒரு சைக்கிள் மாதிரி எடுத்துட்டாலும், முதல் காட்சி ரியல் இல்லைதானே?

// அங்க ஏற்கனவே போயிட்டு வந்தவங்களால சுலபமா அங்க போக முடியும். //
முதல் விஷயம்... இது எங்கேயும் சொல்லப்படற மாதிரி தெரியல... (?) இது யூகம்தான் இல்லையா?
ரெண்டாவது... காப்-னால அங்க சுலபமா போய் வர முடியும் இல்லையா? அப்படிதான் ஃபிஷரை காப்பாத்தறாங்க இல்லையா? அப்ப ஏன் முதல் லெவல்ல(கிட்னாப்), எல்லாரும் செத்தா லிம்போவுக்கு போவோம்னு தெரிஞ்சதும் அவ்வளவு டென்ஷன் ஆகறாங்க...? எல்லாரும் காப்-ஐ வேற திட்டறாங்க... செத்துட்டா அங்க 50-60 வருஷம் வாழணுமான்னு... ஆனா, காப் வந்து சுலபமா காப்பாத்திட முடியுமே... வாட் ப்ராப்ளம்? அவங்கதான் தெரியாம திட்டறாங்கன்னா, காப்-ம் பேசாமதான் இருக்காரு... சொல்லலாம் இல்ல... நோ டென்ஷன்... நான் வந்து காப்பாத்திடுவேன்னு...

// ஏன்னா, ஹீரோவுக்கு தெரியும், தன்னோட மனைவி, அங்க தான் ஃபிஷர ஒழிச்சு வெச்சிருப்பாங்கன்னு. //
// காபோட சப் கான்ஷியாசின் பிரதிபலிப்பான அவரோட மனைவி மால், காப் தன்னைத் தேடி வந்து, தன கூடவே இருக்கணும்னு, அவரை அங்கே ஒழிச்சு வெச்சிருக்காங்க //
ஹீரோவே மூணாவது லெவல்ல(பனிமலை) இருக்கப்ப, ஹீரோவோட மனைவி எப்படி லிம்போல இருப்பாங்க?? (நான் சொல்லறது ஒரு ஸ்மால் கேப்... ஃபிஷர் செத்தப்பறம்... ஹீரோவும் அரியாட்னியும் நாலாவது லெவல் போறதுக்கு முன்ன...)

// ஏன்னா, வீரியம் கம்மியான அடுத்த லெவலுக்கு போயிட்டு, திரும்ப வராரு இல்லையா. அதனால அவர் வலியை உணராம இருக்கலாம். //
முதல் லெவல்ல அடிபட்டு, ரெண்டாவது லெவல் வந்தா, அங்க வலி கம்மியா இருக்கும்... சரி... ஆனா, மூணாவ்து லெவல்ல குண்டடி பட்டு, திரும்ப மூணாவ்து லெவலே வந்தா?

// நீங்க படத்தை தமிழ்ல பாத்துருக்கலாம். //
இங்க்லீஷூலதாங்க மூணுவாட்டி பாத்தேன்... ஒருவேளை தமிழ்ல பார்த்தா புரிஞ்சுருக்குமோ...

// "Don't lose yourself!! Find Saito and bring him back!" . அவங்க துப்பாக்கி எடுத்து ஹீரோவா சுடப் பாக்கறது, அவரை மால் நினைவுலேர்ந்து காப்பாத்தி, நிஜ உலகத்துல கண் முழிக்க வெக்க. //
தல... இது ரெண்டும் முரணா தெரியலையா? சைடோவை கண்டுபிடிக்க காப் லிம்போல இருந்தாதானே முடியும்? அவங்க பாட்டுக்கு சுட்டுட்டு காப் நிஜ உலகத்துக்கு போயிட்டா, சைட்டோவை யாரு காப்பாத்தறது?

//ஹீரோ, தன்னோட குற்ற உணர்ச்சிய போக்கிட்டதுநாளா கிளைமாக்ஸ்ல திரும்பவும் மோதிரத்தை போட்டிக்கிட்டு இருக்கலாம். //
மோதிரம் போடலைன்னு சொன்னேங்க...

சில பதில்கள் நீங்க சொல்லியிருக்கிற மாதிரிதான் நானும் யோசிச்சேன்... அந்த பதில்கள் எல்லாம் லாஜிக் மீறல்கள் இல்லைன்னாலும், ரொம்ப லாஜிக்கலா இருக்குன்னு சொல்ல முடியாது... (அதாவது அந்த பதில்கள் தப்புன்னு யாராலயும் சொல்ல முடியாது... ஆனா, படத்துல அப்படி இருக்கவேண்டிய அவ்சியம் என்னன்னும் தெரியல...) உதாரணத்துக்கு,
// ஏன்னா, வீரியம் கம்மியான அடுத்த லெவலுக்கு போயிட்டு, திரும்ப வராரு இல்லையா. அதனால அவர் வலியை உணராம இருக்கலாம். //
// ஹீரோவும் அவர் மனைவியும் ஐம்பது வருஷம் நிஜமாவே லிம்போல கழிக்கறாங்க. ஆனா இந்தக் கதைய கேட்கற அரியாட்னேவோட காட்சியமைப்புலதான் நாம பாக்கறோம். அதனாலதான் ரெண்டு பேரும் இளமையாவே இருக்காங்க. இன்னொரு முறை காப் அதைப் பற்றி பேசும்போது, வயதான அவர்களோட காட்சிகள் வரும். ஏன்னா அதுதான் உண்மையான அவரோட காட்சியமைப்பு. //
ஏன் ரெண்டு பேர் பார்வையில காட்சி அமைக்கணும்? அப்படி என்ன significance அதுக்கு? சும்மா எதுக்கு வயசான மாதிரி மேக்-அப்லாம் போட்டுகிட்டு...

disclaimer: தல... நான் ஏதாவது தப்பா புரிஞ்சுட்டாலும், திருத்துங்க... நாளைக்கு வர்றேன்...

கா.கி said...

@all
புதுப் பதிவுல பதில் சொல்லிட்டேன். பாத்துக்கோங்க..